Sunday, August 17, 2014

வில்லூன்றி திருவிழா


ஏழாம் நாள்உற்சவம்

மர்ம நபர்கள்

திருகோணமலையில் மீண்டும் மர்ம நபர்களின் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.  நிலாவெளி பொலிஸ் பிரிவில் இந்த அச்சம்  கடந்த வாரம் முதல்  தோன்றி உள்ளது.

Wednesday, August 13, 2014

மரண அறிவித்தல்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஹசன் மௌலவி நேற்று செவ்வாய்க்கிழமை 12.08.2014 கண்டியில் காலமானார்.  சில மாத காலம் நோய்வாய்ப்பட்ட இவர் அங்கு சிகிற்சை பெற்று வந்தார். ஜனாசா நல்லடக்கம் இன்று புதன்கிழமை 13.08.2014 கிண்ணியாவில் இடம் பெறும்.

Saturday, August 9, 2014

குண்டுத்தாக்குதல்

திருகோணமலை கண்டி வீதியில் 5வது மைல் கல் பிரதேசத்தில் வீடு ஒன்றின் மீது வெள்ளிக்கிழமை 08.08.2014 நள்ளிரவு மர்ம நபர்கள் கைக்குண்டு வீச்சு தாக்குதல் நடத்திஉள்ளனர். வீட்டில் சிறுசேதம் ஏற்பட்டுள்ளது. சீனன்குடா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Thursday, August 7, 2014

பிணையில் விடுதலை

குச்சவெளி பிரதேச  சபையின் தலைவர் ஆ.முபாறக் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  திருகோணமலை நீதவான் தி.சரவணராஜா இவரை இன்று வியாழக்கிழமை 07.08.2014 பிணையில் விடுவித்தார்.

Wednesday, August 6, 2014

விளக்கமறியல்

குச்சவெளி பிரதேச  சபையின் தவிசாளர் ஆ.முபாறக் ஒரு நாள் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். பதில நீதவான் தி.திருச்செந்தில்நாதன் இந்த உத்தரவினை இன்று புதன்கிழமை வழங்கி உள்ளார். போக்குவரத்து பொலிசார் ஒருவரை அச்சுறுதிய குற்றச்சாட்டில் இவர் மீது  புல்மோட்டை பொலிசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.

Saturday, November 23, 2013

புலமையாளர் பாராட்டு

ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் இருந்து  இவ்வருடம் தரம 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி தகைமை பெற்ற மாணவர்களுக்கான பாராடடு விழா நேற்று வெள்ளிக்கிழமை நடத்தப்பெற்றது


திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன பிரதம அதிதியாகக கலந்து சிறப்பித்தார்..

Thursday, November 21, 2013

விளக்கமறியல் நீடிப்பு

கதிரவன்
திருகோணமலை சிறைச்சாலையில் விள்க்கமறியலில் வைக்ககப்படடுள்ள 32 இந்திய மீனர்களுக்கும் மேலும் ஒரு வார காலம் விள்க்கமறியல் நீடிக்கப்பட்டள்ளது.

Monday, November 4, 2013

ஜனாதிபதி புலமைபபரிசில்

ஜனாதிபதி நிதியத்தில் இருந்து கிண்ணியா கல்வி வலயத்தைச் சேரந்த 77 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரம் பரீட்சையில் திறமை சித்திகளைப் பெற்ற வருமானம் குறைந்த மாணவர்களுக்கே முதல் கட்டமாக  இவை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Friday, July 5, 2013

பொலிசாருக்கு விளக்க மறியல்

திருகோணமலையில் 2006 ஆம் வருடம் இடம் பெற்ற 5 மாணவர்களது மரணம் தொடர்பாக  12 பொலிசார் குற்றத் தடு்ப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.