Tuesday, November 27, 2012

இராணுவம் தடை விதிப்பு

மெக்கெய்சர் விளையாட்டரங்கில் திருகோணமலை உதைபந்து லீக் நடத்தவிருந்த உதைபந்து போட்டி  இராணுவத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் பார்வையாளர்களும் விளையாட்டு வீரர்களும் பலத்த ஏமாற்றத்துடன் திரும்பினர்.
திருகோணமலை உதைபந்து லீக் 10.11.2012 தொடக்கம் கழகங்களுக்கு இடையே லீக் முறையில் சுற்றுப் போட்டியினை  நடததி வருகின்றது. இன்று செவ்வாய்க்கிழமை 27.11.2012 மெக்கெய்சர் விளையாட்டரங்கில் காலை 8.30 மணிக்கு ஒலிம்பிக்ஸ் கழகத்திற்கும் ஈஸ்ரன் ஈகிள்ஸ் கழகத்திற்குமான போட்டி  நடைபெற்றது. இதில் ஒலிம்பிக்கஸ் கழகம் 2 : 0  என்ற கோல் கணக்கில் ஈஸ்ரன் ஈகிள்ஸ் கழகத்தை வெற்றி கொண்டது.
இரண்டாவது போட்டி 10.30 மணிக்கு ஜமாலியா விளையாட்டுக் கழகத்திற்கும்  கிறீன்லைற் கழகத்திற்கும் இடையே  நடக்க விருந்தது.  நடுவர்கள் கழகங்க மைதானத்திற்கு  அழைக்க முற்பட்ட சமயம் அங்கு  வந்த இராணுவத்தினர் போட்டி  நடத்தப்படக் கூடாது. இன்று  மாவீரர் தினம் இதன் போது எவ்வித போட்டிகளும் நடத்த நாம் அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி போது போட்டியினை  நடத்த விடாது தடுத்தனர்.
இது எமது வருடாந்த செயற்பாடு எனவும் இதனை  நாம் இம்மாத ஆரம்பத்தில் இருந்து நடத்தி வருகின்றோம். இதற்கான அனுமதி பொலிசாரிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது என ஏற்பாட்டாளர்கள் இராணுவத்தினரிடம் கூறிய போதும் அவர்கள் போட்டி நடத்துவதை முற்றாக  மறுத்து விட்டனர்.
காலையில் போட்டி  ஆரம்பப்பதற்கு முன்னரே திட்டமிட்டபடி  பொலிசார் அங்கு  காவல் கடமையிலும் ஈடுபட்டிருந்தனர்.
மெக்கெய்சர் மைதனத்தில் கழகவீரர்கள், பார்வையாளர்கள், போட்டி  ஏற்பாட்டாளர்கள் எவரும் தரித்து நின்று விடாதவாறு  வெளியேற்றி விட்டு  அங்கிருந்து அகன்று சென்றனர்.
இராணுவத்தின் இச் செயற்பாடு காரணமாக  இன்று  மாலை  3.00 மணிக்கு பிக்புட் கழகத்தற்கும் புனித அந்தோனி கழகத்திற்கும்  இடையே நடைபெற இரந்த போட்டியும் ரத்துச் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment