Saturday, January 12, 2013

வாழைநார் தொழிநுட்பம் அறிமுகம்

திருகோணமலையில் வாழை நார் தொழிநுட்பம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. வாழை தடலில் இருந்து நார் பிரித்தெடுக்கப்பட்டு அதனைக் கொண்டு  பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்.
இதனை பிரித்தெடுக்கும் இயந்திரம் வியாழக்கிழமை 10.01.2013 திருகோணமலை  Alive Venture   எலைவ் வென்சர் நிறுவனத்தால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.188 A, உவர்மலை கீழ் வீதியில் உள்ள நிறுவனத்தின் அலுவலகத்தில் நிதி கம்பனிகளின் முகாமையாளர்கள். வங்கி அதிகாரிகள். முதலீட்டாளர்கள் மத்தியில் இது அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. 400,000.00 ரூபாய்கள் பெறுமதியான  இவ் இயந்திரத்தைக் கொண்டு தினம் ஒன்றுக்கு குறைந்தது 20 கிலோ கிராம் நூல் பிரித்தெடுக்க முடியம், மிகக் குறைந்தளவு மின்சாரம் இதற்கு பயன்படுத்தப்படும்.
அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இயந்திரத்தை கிழக்கு  மாகாண  தொழிலு்துறை திணைக்களம் முதல் கொள்வனவான  பெற்றுக் கொண்து.திணகை்களத்தின் திருகோணமலை இணைப்பாளர் இரண்டு இயந்திரங்களுக்கான  கேள்விகளை வழங்கி உள்ளார்.

No comments:

Post a Comment