Sunday, December 9, 2012

தமிழர் நெற்காணிகளில் அத்துமீறல்

மூதூர் பிரதேச  செயலாளர் பிரிவில் உள்ள  கங்குவேலி கிராம சேவையாளர் பரிவில்  உள்ள படுகாடு, முதலைமடு போன்ற பகுதிகளில் பெரும்பான்மை யினரால் மேற்கொள்ளப்படும் அத்து மீறல் நெற்செய்கையை தடுத்து நிறுத்து மாறு  கிழக்கு  மாகாண விவசாய அமைச்சருக்கு  திருகோணமலை நகர சபை உறுப்பினர் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார். இதன் பிரதி மாகாண  சபையின் எதிர்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணிக்கும்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நகர சபை உறுப்பினர் நந்தகுமார் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தாவது. கங்குவேலி கிராம சேவையாளர் பிரிவில் உள்ள படுகாடு, முதலைமடு போன்ற வயற் காணிகளில் கங்குவேலி, பட்டித்திடல் போன்ற கிராமங்களைச் சேர்ந்த  விவசாயிகள் பயிர்செய்கையை காலம் காலமாக  மேற்கொண்டு வந்தனர்.
தற்பொழுது பெரும்போகச் செய்கைக்கான வயல்களை பயன்படுத்தி நெற்செய்கை மேற்கொள்ள முயன்ற போது பெரும்பான்மை இன விவசா யிகள் இக்காணிகளில் அத்துமீறி தமிழ் கிராம மக்களால் பயன்படுத்திய வயல்களில் செய்கையை மேற்கொள்கின்றனர்.
நெற்காணிகளுக்கான உரித்தாவணங்களுடன் மேற்படி விடயத்தை மூதூர் பொலிசுக்கும் மூதூர் பிரதேச  செயலக அதிகாரிகளுக்கு தெரிவித்த போதும் ஆக்கபுர்வமான நடவடிக்கை எதுவும் சம்பந்தப்பட்ட தரப்பினால் மேற்கொள்ளப்படவில்லை.  என கிராம விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இத குறித்து ஆக்கபுர்வமான நடவடிக்கை எடுத்த தமிழ் விவசாயிகள் தமது சொந்த நிலங்களில் பயிர் செய்கையை மேற்கொள் அவண செய்வதோடு இச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஏழை தமிழ் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment