இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் நாடளாவிய
ரீதியில் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டிகளை நடத்தி வருகின்றது.
திருகோணமலை மாவட்டத்துக்கான லீக் முறையிலான போட்டியில்
நேற்று ஞாயிற்றுக்கிழமை பெருந்தெரு விக்நேஸ்வரா மகா வித்தியாலயத்திற்கும். ராஜகீய வித்தியாலோக பாடசாலைக்கும் இடையே நடைபெற்றது. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய ராஜகீய பாடசாலை 127 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு களம் இறங்கிய விக்நேஸ்வரா மகா வித்தியாலய அணியினர் 96 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தனர்.
இரண்டாவது இன்னிங்சில் 24 ஓவர்கள் விளையாடிய ராஜகீய பாடசாலை 5 விக்கட் இழப்பிற்கு 60 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்தி விக்நேஸ்வரா மகா வித்தியாலய அணியினரை துடுப்பெடுத்தாட அழைத்தனர்.
பதிலுக்கு 91 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களம் புகுந்த விக்நேஸ்வரா மகா வித்தியாலயம் ஆட்ட நேரம் முடியும் வரை ஒரு விக்கட் இழப்பிற்கு 60 ஓட்டங்களைப் பெற்றனர்.
போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
நேற்று முன்தினம் சனிக்கிழமை 01.12.2012 ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி வித்தியாலோக ராஜகீய பாடசாலை அணியிரை 8 விககட்டுக்களால் வெற்றி கொண்டிருந்தனர்.

No comments:
Post a Comment