இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்டச் சங்கம் நடத்திய போட்டியில் கிண்ணியா அக் ஸா கல்லூரி வெற்றி பெற்றது.
19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவு 2 போட்டி திருகோணமலை மெக்கெய்சர் மைதானத்தில் வியாழக்கிழமைக 27.09.2012 நடைபெற்றது. இதில் கி்ண்ணியா மத்திய கல்லூரியை எதிர்த்து அல் அக்ஸா கல்லூரி விளையாடியது. ஆட்ட நேரம் வரை எந்த அணிகளும் கோல்களைப் பெற்றிருக்கவில்லை. வெற்றியைத் தீர்மானிக்க தண்ட உதைகள் வழங்கப்பட்டது. இதில் 4 க்கு 3 என்ற கோல்கணக்கில் அக் அக்ஸா கல்லூரி வெற்றி பெற்றது.
No comments:
Post a Comment