Monday, October 1, 2012

கிழக்கு மாகாண சபை அமர்வு

கிழக்கு மாகாண  சபையின் அமர்வு இன்று திங்கட்கிழமை காலை 11.00 மணிக்குஆரம்பமாகியது.
முதலில் சபையில் தலைவர் தெரிவு  இடம் பெற்றது. ஆரியவதி கலபதி அவர்களை மதல் அமைச்சர் நஜிப் அப்துல் மஜீது முன்மொழிய முஸ்லிம்   காங்கிரஸ் உறுப்பினர் ஜமீல் ஆமோதித்தார்.  இதனைத் தொடர்ந்து  ஆரியவதி கலபதி  சபையின் தலைவராக  தெரிவானார்.
தலைவராக தெரிவு  செய்யப்ட்ட  ஆரியவதி சபை  தலைவருக்கான  ஆடையிணை  அணிந்த பின்னர் மீண்டும் சபை  கூடியது.  தலைவரின் பிரமாணம் இடம் பெற்றது. இதன் பின்னர் பிரதி தலைவர் தெரிவு  இடம் பெற்றது.  பிரதி தலைவராக  மீரா சாகபு  சுபைர் அவர்களை  எம்.எஸ்.உதுமாலெப்பை  முன்மொழிய அம்பாறை  மாவட்ட உறுப்பினர்  ஏ.எல்.நசீர் வழிமொழிந்தார்.இதன் பின்னர் கட்சி தலைவர்களுக்கான கூட்டத்திற்காக  சபை  சில நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டது. 
12.00  மணிக்கு சபைஅமர்வு மீண்டும்தொடங்கி மதியம்1.30 மணிக்கு  நிறைவடைந்தது.  கட்சிகளின் தலவர்கள் தமது நன்றி உரைகளை  வழங்கினார்கள்.

No comments:

Post a Comment