Saturday, October 20, 2012

சாரணர் ஒன்றுகூடல்

திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கத்தின் ஒன்றுகூடல் இன்று சனிக்கிழமை 20.10.2012 காலை 9.00 மணிக்கு  ஆரம்பித்து வைக்கப்பட்டது. சாரணர் சங்கத்தின் தலைவரும் பிரபல சட்டத்தரணியுமான  ஆ.ஜெகசோதி இதனை  ஆரம்பிதத வைத்தார்.
புனித சூசையப்பர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இச் சாரணர் ஒன்றுகூடலில் புனித சூசையப்பர் கல்லூரி, ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி. உவர்மலை விவேகாநந்தா கல்லூரி,  பெருந்தெரு விக்நேஸ்வரா மகா வித்தியாலயம், செல்வநாயகபுரம் இந்து மகா வித்தியாலயம். ஹோமரன்கடவெல வித்தியாலயம், சீனன்குடா தமிழ் வித்தியாலயம், தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரா மகா வித்தியாலயம். ஸ்ரீ சண்முக  இந்து மகளீர் கல்லூரி ஆகியவற்றில் இருந்து 151 சாரணர்களும் 100 குருளைச்சாரணர்களும் கலந்து கொண்டார்கள்.






ஞாயிற்றுக்கிழமை வரை இவ் ஒன்றுகூடல் நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment