Thursday, November 8, 2012

கோணேஸ்வரா இந்துக் கல்லூரி வெற்றி

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் நடத்திய 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான  போட்டியில் இன்று வியாழக்கிழமை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினர் 3 விகட்டக்களால் வெற்றி பெற்றுக் கொண்டனர்.

பதவியா மகா வித்தியாலயத்திற்கும் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரிக்கும் இடையே  போட்டி  இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் களம் இறங்கிய பதவிய மகா வித்தியாலய அணியினர் 22.5 பந்த பரிமாற்றத்தில் 45 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து கொண்டனர். பதிலுக்கு விளையாடிய  கோணேஸ்வரா இந்துக் கல்லூரி   17.3 பந்த பரிமாற்றத்தில் சகல  விக்கட்டுக்களையும் இழந்து 34 ஒட்டங்களை  மாத்திரம் பெற்றனர்.
இரண்டாவது இன்னிங்ஸ் இல் பதவியா மகா வித்திதயாலயம் 26.1 பந்த பரிமாற்றங்களில் 8 விக்கட்  இழப்பிற்கு 78 ஓட்டங்களைப் பெற்று  ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.  ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரிக்கு  23 பந்து பரிமாற்றங்களில் 90 ஓட்டங்கள் இலக்காக  கொடுக்கப்பட்டது. அதனை  சாதகமாக பயன்படுத்திய அவ் அணியினர் 22.3 பரிமாற்றங்களில் 7 விக்கட் இழப்பிற்கு 92 ஓட்டங்கள் பெற்று 3 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுக் கொண்டனர்.

No comments:

Post a Comment