Saturday, December 22, 2012

வலைப்பயிற்சிக்கு நிதி

திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் வீர்களின் ஆற்றல்களை மேலும் வளப்படுத்துவற்காக  2 பயிற்சி வலை ஆடுதளங்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்காகவும்  ஆடுகளம் ஒன்றை  அமைப்பதற்காகவும். ஸ்ரீ லங்கா கிரிக்கெட்  500,000 ரூபாய்களை  திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கத்திற்கு  வழங்கி உள்ளது.
இதற்கான  காசோலை கடந்த செவ்வாய்க்கிழமை 18.12.2012 வடக்கு கிழக்கு மாகாண  கிரிக்கெட் அபிவிருத்தி குழுவின் தலைவர் எஸ்.மதிவாணனால் திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பசீர் அமீரிடம்  வழங்கி வைக்கப்பட்டது.
இது விடயமாக  பசீர் அமீருடன் தொடர்பு  கொண்டு கேட்ட போது சங்கத்தின் செயலாளர் மருத்துவர் சையொலிபவனால் கூட்டப்படும் செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment