Saturday, December 22, 2012

வெள்ள நிவாரணம்

திருகோணமலை  மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள  வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சித் திட்டதால் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

1000 குடும்பங்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. சேருவில பிரதேச  செயலாளர் பிரிவில் 239 குடும்பங்கள்,  வெருகல் பிரதேச செயலாளர் பரிவில் 250, மூதூர். 400. பட்டணமும் சூழலும் 60. கந்தளாய் 50 என இவைகள் வழங்கப்பட்டுள்ளது.  மீள் எழுச்சித் திட்டத்தின் பிரதி திட்ட பணிப்பாளர் ஜி்பாலமுரகன், எந்திரி விக்னேஸ்வரமூர்த்தி  ஆகியோர் இவற்றினை வழங்கி வைத்தார்கள்.  சேருவில பிரதேசத்தில்  சோமபுர பன்சாலையில் தங்கியுள்ள  இடம்பெயர்ந்தவர்களுக்கு இவை  வழங்கப்பட்டது.


கிழக்கு மாகாண  சபையின் தவிசாளர் ஆரியவதியின் வேண்டுகோளின் பேரில் இத் திட்டத்தை தாம்  மேற்கொண்டதாக  பிரதி திட்ட பணிப்பாளர் தெரிவித்தார். மேலும் இவ்வாறு நிவாரணம் வழங்குவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதி அமைச்சர்களான  சுசந்த புஞ்சி நிலமெ, எம்.கே.டி.எஸ்குணவர்த்ன ஆகியோர்  கோரியதாகவும் அவர்  தெரிவித்தார்.

No comments:

Post a Comment