Tuesday, December 4, 2012

ஆர்ப்பாட்டம்

புல்மோட்டை இல்மனைற் தொழிற்சாலை ஊழியர்கள் இன்று மதியம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
தொழிற்சாலை வளங்களை  அதன் தலைவர் பிறருக்கு  தாரைவார்க்கின்றார். இதற்கு  எதிரப்பு  தெரிவிததும், தாம் கோரிய  சம்பள உயர்வு கோரிக்கைளை தலைவர் ஏற்றுக் கொள்ள மறுத்தமைக்கு  எதிர்ப்பு  தெரிவித்தும் இப்போராட்டம் நடத்தப்பட்டது. பகல் போசன  இடைவெளையின் போது ஊழியர்கள் அனைவரும் தொழில்சாலை வாய்ிலுக்கு வநது இவ் எதிர்ப்பு  போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இவர்கள் பல்வேறு கோசங்களையும் தலைவருக்கு எதிராக  எழுப்பினர். நன்றாக  திட்டமிடப்பட்ட வகையில் இப்போராட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு பதாதைகளையும் ஊழியர்கள் தாங்கியிருந்தனர்.

No comments:

Post a Comment