Wednesday, December 5, 2012

பெண்கள் விழிப்புணர்வு ஊர்வலம்



திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச  செயலாளர் பிரிவு பெண்கள் வலையமைப்பினால் பெண்கள் சிறுவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி  பேரணி ஒன்று நடத்தப்பட்டது. வியாழக்கிழமை காலை  திருகோணமலை மட்டக்களப்பு  வீதியில் பெரியபாலம் என்னும் இடத்தில் இருந்து பேரணி ஆரம்பிக்கப்பட்டு பிரதான வீதி வழியாக  பிரதேச  செயலகத்தை சென்றடைந்தது. 

பெண்கள் வன்முறைக்கு உள்ளாகுதல். வெளிநாட்டிற்கு பெண்களை சட்டவிரோதமாக அனுப்புதல். வெளிநாடகளுக்கு பெண்கள் முறையற்றவிதமாக அனுப்பப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள். சட்டவிரோத மதுபாவனை. பெண்கள் சிறுவர் துஸ்பிரயோகம் போன்ற பிரச்சனைகளை வலியுறுத்தும் பதாதைகளையும் பேரணியில் சென்றவர்கள் தாங்கியிருந்தனர். இறுதியில் பிரதேச செலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment