கிண்ணியா கல்வி வலயத்தில் உள்ள ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயத்தில் இவ்வருடம் நடை பெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 8 மாணவர்கள் 147 என்ற வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். இவர்களைப் பாராட்டி கௌரவித்து பரிசு வழங்கும் நிகழ்வு புதன்கிழமை 05.12.2012 காலை வித்தியாலயத்தில் நடைபெற்றது.
அதிபர் கே..ராஜசேகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி முதன்மை விருந்தின ராகவும். கேணிப்பித்தன் ச.அருளானந்தம் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர். அதிதிகள் மற்றும் விருந்தினர்களுடன் தகைமைப் புள்ளி களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வித்தியாலய வாயிலில் இருந்து ஊர்வலமாக நிகழ்வு நடைபெற்ற மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
தகைமை பெற்ற மாணவர்களுக்கு பரிசாகவும். ஏனைய மாணவர்களை உற்சாகப்படுத்தும் முகமாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது. வெளிநாடுகளில் வாழும் உறவுகளினால் இந்த துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment