Friday, January 11, 2013

போட்டித் தொடர் ஒத்திவைப்பு

ஸ்ரீ  லங்கா சுதந்திர அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கழகங்களுக்கு இடையிலான  20 ஓவர் கிரிக்கெட் போட்டி காலச்சூழல் காரணமாக  ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை 12.01.2013 தொடக்கப்பட  முன்னர் திட்டமிடப்பட்டு இருந்தது.  21 கழகங்கள் இச்சுற்றுப் போட்டியில் பங்கு கொள்வதற்கு இருந்தன.
திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக  விளையாட்டு மைதானங்களை  தயார்படுத்துவதிலும், போட்டிகளை நடத்துவதிலும் சிக்கல்கள்தோன்றி உள்ளது.
போட்டிக்கான  திகதி  பின்னர் அறிவிக்ப்படும் என சுதந்திர அமைப்பின் தலைவர் ரஜேந்திரன் தெரிவித்தார். போட்டித்தொடரில் முதலிடம் வகிக்கும் கழகத்திற்கு 100.000.00 பணப்பரிசாக  வழங்கப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment