Monday, February 4, 2013

உயர்ஸ்தானிகர் விஜயம்

இலங்கையின் 65வது சுதந்திர தின  வைபவத்தில் கலந்து கொள்ள திருகோணமலைக்கு வருகை தந்த கனடா பிரதி உயர்ஸ்தானிகர் ரொபேர்ட் மெக் டூகல்  Robert Mc Dougall  ஊடக  இல்லத்திற்கு வியஜம் செய்தார்.
திங்கட்கிழமை 04.02.2013 மாலை 3.30 மணிக்கு விஹாரை வீதியில் உள்ள திருகோணமலை ஊடக இல்லத்தில் மாவட்ட ஊயகவியலாளர் சங்கத்தின் உறுப்பினர்களைச் சந்தித்து உரையாடினார்.
கனடா உயர் ஸ்தானிகராலயத்தன் நிதி உதவியுடன் தேடலுக்கான பொது மையம் Serch for Commen Grounds ஊடகவியலாளர்களுக்கு நடத்தும் பயிற்சியின் செயற்பாடுகளையும், அவர்களால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளையும் கேட்டறிந்தார்.
பயிற்சியாளர்கள் தாம் களத்தில் மேற்கொண்ட ஆய்வு விடயங்களை பிரதி உயர்ஸ்தானிகருக்கு  விளக்கி சொன்னார்கள்.
ஊடகவியலாளர் சங்க உறுப்பினர்கள் மத்தியில் அவர் கருத்து தெரிவி்க்கையில்,  மனித உரிமைகள் விடயங்களில் கனடா மிகவும் நல்ல செயற்பாட்டைக் கொண்டுள்ளது. அங்கு மனித உரிமைகள் மதிக்கப்படுகின்றது. விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம். இதை தடை செய்வதில் கனடா உறுதியாக நின்று அதனையும் நிறைவேற்றியது. இப்போது இந் நாட்டில் சமாதானம் நிலவுகின்றது. நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்வதற்கு  ஊடகவியலாளர்கள் உறுதுணையாக  நிற்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment