Saturday, May 4, 2013

போசாக்கு உணவு

திருகோணமலை ரொட்டறி கழகம் மூதூர் கிழக்கு பகுதியில்  போசாக்கு உணவு வழங்கும் செயற்திட்டத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்தி உள்ளது. ரொட்டறி கழகத்தின் 35வது தலைவர் பதவி ஏற்பு தினத்தை முன்னிட்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

போசாக்கு உணவு குழந்தைகளுக்கு வழங்கும் திட்டம் பாட்டாளிபுரம் கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டது. இதற்காக  75 குழந்தை பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இக்குழந்தைகள் ஒவ்வொன்றுக்கும் தினம் ஒன்றுகு்கு  8 மிகை போசாக்கு பிஸ்கட்டுக்கள்  50 நாட்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. இதன் அங்குராப்பண நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை 03.05.2013 காலை பாட்டாளிபுரம் சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.
மூதூர் பிரதேச  சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் சுக்கிரி இதனை ஆரம்பித்து வைத்தார்.
ரொட்டறி கழகத்தின் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் ரொட்டறி கழகத்தின் பிரமுகர்களுடன் பிரதேச  பொது சுகாதார உத்தியோகத்தரகள் குடும்பநல மாதுக்கள் பிரதேச  நலன் விரும்பிகள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மூதூர் கிழக்கு பிரசேத்தில் அடையாளம் காணப்பட்ட கிராமங்களில் சுமார் 214 குழந்தைகள் போசாக்கு குறைந்தவர்களாகக் காணப்படுகின்றார்கள் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.இவர்களுக்கும் இவை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்டும் என ரொட்டறி கழக பிரமுகர்கள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment