புல்மோட்டை
கனிப்பொரு் மணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் இன்று 30.04.2013 செவ்வாய்க்கிழமை 30.04.2013
மதியம் ஒரு மணி நேரம் அடையாள பணி பகிஸ்கரிபு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டுத்தாபனத்தில் நடைபெறும் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமககு வழங்குவதற்கு இணக்கம் செய்யப்பட்டிருந்த மணல் தூசுக்கான கொடுப்பனவு. போக்குவரத்து கொடுப்பனவு.என்பன வழங்கப்படாமையைக் கண்டித்தும் இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
கனிப்பொருள் மணல் கூடடுத்தாபன நிறைவேற்றுப் பணிப்பாளர் டிசான் குணசேகர. கனிய வளமைச்சர் தயாசிறி த திசேரா ஆகியோர் இக் கொடுப்பனவுகள் பங்குனி மாத சம்பளத்துடன் வழங்குவதாக ஏற்கனவே உறுதி அளித்திருந்தனர். ஆனால் இன்று வரை அவைகள் வழங்கப்பட்டு இருக்கவில்லை. இதனைக் கண்டித்தே பணி பகிஸ்கரிப்பில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். மணல் கூட்டத்தாபனத்தின் பிரதான வாயிலின் முன்னால் ஒன்று கூடியவர்க் கோரிக்கைக் அடங்கிய பதாதைகளையும் தாங்கி இருந்தனர். இதன் காரணமாக புல்மோ்ட்டை பிரதேசத்தில் பதற்ற நிலை சொற்ப நேரம் காணப்பட்டது. பொலிசார் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்து நிலமைகளைக் கட்டுப்படுத்தினர்.
இலங்கை சுதந்திர தொழிலாளர் சங்கம். ஐக்கிய வர்த்தக தொழிலாளர் சங்கம் ஆகிய அரசு சார்பு தொழில் சங்கங்கள் இப்போராட்டத்தை ஏற்பாடு செய்து வழி நடத்தியிருந்தன.

ஒரு வார காலத்திற்குள் தமக்கான கொடுப்பனவு வழங்கப்பட தவறும்
பட்சத்தில் தொடர்ச்சியான பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட
உள்ளதாகவும் தொழில் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment