Thursday, April 25, 2013

மண்டை ஓடு வைத்து பயமுறுத்தல்

திருகோணமலை நகரில் உள்ள பிரபல பாடசாலை ஆசிரியர ஒருவர் வீட்டின் வாயிலில்  உட்புறமாக  மண்டை ஓடு ஒனறு வைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டுள்ளார். மாணிக்கவாசர் வீதியில் நேற்று இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருகோணமலை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  வீட்டு நுளைவாயிலுக்கு கீழாக  கடிதம் ஒன்றும் செருகி வைக்கப்பட்டுள்ளது. அதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் என  குறிப்பிடப்பட்டுள்ளது. கடிதத்தில் மாணவர்களின் சிகை அலங்கார விடயத்தில் அடிமைப்படுத்த வேண்டாம் என கொட்டை எழுத்துகளில் எழுதப்பட்டு உள்ளது.
இன்று வியாழக்கிழமை அதிகாலை வாயிலைத் திற்க்க முனைந்த போது இதனைக் குறித்த ஆசிரியர் கண்டு கொண்டுள்ளார். சம்பவத்தை அறிந்த இராணுவத்தினரும் ஸ்தலத்திற்கு வந்து மண்டை ஓடு   விசாரணைகளைத் தொடங்கி உள்ளனர்.



No comments:

Post a Comment