Sunday, June 30, 2013

நோமன்ஸ் கழகம் வெற்றி

திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய  50 பந்து பரிமாற்றம் போட்டியில் சனிக்கிழமை 29.06.2013  நோமன்ஸ் கழகம் ஈச் விளையாட்டுக் கழகத்தை 83 ஓட்டங்களால் வெற்றி கொண்டனர்.

ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை 29.06.2013 இப்போட்டி நடைபெற்றது. நாணயச் சுழங்சியில் வெற்றி பெற்ற நோமன்ஸ் கழகம் ஈச் கழகத்தை களத்தடுப்பை மெற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது. நோமன்ஸ் கிகம் 49வத பந்து பரிமாற்றம் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 273 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது.  கு.சக்திபிரணவன் 78 ஓட்டம். டிக்சன் 51 ஓட்டம், கு.சக்திகுமரன்ஆட்டம்இழக்காமல் 42. கமிலஸ் பிரியானந்த் 33 ஒட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் ஈச் சகழத்த்தின் சார்பில் இப்திகார்  32 ஓட்டங்களுக்கு 3 விககட்டுக்களையும், கிசான் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும்  பெற்றுக் கொண்டனர்.
பதிலுக்கு களம் புகுந்த ஈச் விளையாட்டுக் கழகத்தினர்  34வது பந்து பரிமாற்றம் நிறைவில் சகல விக்கட்க்களையும் இழந்த 190 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டனர்.

No comments:

Post a Comment