Sunday, June 30, 2013

பழைய மாணவர் தினம்

திருகோணமலை இராம கிருஷ்ண சங்கம் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி பழைய மாணவர் தினம் ஒன்றுகூடல் இன்று ஞாயிற்றுக்கிழமை  30.06.2013 நடைபெற்றது.  கல்லூரி திறந்த வெளி  அரங்கில் இந்நிகழ்வு நடைபெற்றது.  10வது வருடமாக இவ் ஒன்றுகூடல் நடத்தப்பட்டு வருகின்றது
. இன்றையநிகழ்வுக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உளநலத்துறை வைத்திய நிபுநர் மருத்துவர் த.கடம்பநாதன் பிரதம அதிதியாகவும், பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம் பிரதம குரு வேதாகமமாமி சோ.ரவிச்சந்திரக்குருக்கள். கௌர விருந்தினராகவும். ஓய்வு நிலை வயக் க்வி பணிப்பாளர்கு.திலகரெத்தினம். ஓய்வுநிலை கல்லூரி முந்நாள்ஆசிரியர் த.சச்சிதானந்தராஜா ஆகியோர் விசேட  விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர். இவர்கள் நால்வரும் இக்கல்லூரியின் பழைய மாணவர்களாவார். இவர்கள் சமூகத்தில் உள்ள உயர்நத நிலையைக் கருத்தில் கொண்டு பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவி்கப்பட்டனர்.


பழைய மாணவர் சங்கத்தின் செய்திமடலான  சாரல் நான்காவது இதழும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதனை சங்கத்தின் செயலாளர் சாம் ஸ்ரீதரனிடம் இருந்து மூத்த ஊடகவியலாளரும் பழைய மாணவருமான சி.குருநாதன் பெற்றுக்கொண்டார்.

பழைய மாணவர் தினத்தை ஒட்டி நடத்தப்பட்ட விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment