Friday, July 5, 2013

பொலிசாருக்கு விளக்க மறியல்

திருகோணமலையில் 2006 ஆம் வருடம் இடம் பெற்ற 5 மாணவர்களது மரணம் தொடர்பாக  12 பொலிசார் குற்றத் தடு்ப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை நீதவான் முன் பொலிசார் வியாழக்கிழமை இரவு ஆஜர் செய்த போது  12 பேரையும் இம்மாத் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் எம்.அஸஹர் உத்தரவிட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை இவர்கள் பல்வேறு பொலிஸ் பிரிவுகளில் இருந்த கைது செய்யப்பட்டு திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் அடங்குகின்றார்.  இவர்கள் விசேட அதிரடிப்டையைச் சேர்ந்தவர்களாவார்.
2006.01.02 மாலை திருகோணமலை கடற்கரை முன்றலில் காந்தி சிலைக்கு அருகாமையில் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது முச்சக்கர வண்டியில் வந்தவர்களால் கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடரந்து கடற்கரையில் ஓய்வினை கழிக்க வந்தவர்கள் நாலா புறமும் சிதறி ஓடினர்.  இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினர்  சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன்போமு தடுத்து நிறுத்தப்பட்ட இந்த 5 மாணவர்களும் துப்பாக்கி கூடு்டுக் காயங்கள் காரணமாக  மரணத்தை தழுவியிருந்தனர்.  2 மாணவர்க் காயங்களுக்கு உள்ளாகி மருத்துவ மனையில் சிகிற்சைக்கு உட்படுத்தப்பட்னர். இச்சம்பவத்தை தொடர்ந்து  காயமடைந்த 2 மாணவர்களும் இறந்த 5 மாணவர்களத பெற்றோர்களும்  அச்சம் காரணமாக  நாட்டை விட்ட வெளியேறி புலம்பெயர் நாடுகளில் வசித்து  வருகின்றனர்.

No comments:

Post a Comment