கிழக்கு மாகாண சபைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள் இன்று பதவி பிரமாணம் செய்து கொண்டனர். திருகேர்ணமலை நகர சபை மண்டபத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் முன்நிலையில் இவர்கள் பிரமாணாம் செய்து கொண்டனர்.
காலையில் புனித மரியாள் பேராலயம், முகைதீன் பள்ளிவாசல் என்பனவற்றுக்குச் சென்ற உறுப்பினர்கள் பின்னர் பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டனர். அங்கிருந்து ஊர்வலமாக மங்கல் வாத்தியம் முழங்க கடற்படைத்தள வீதி வழியாக விழா மண்டபததிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
நகராட்சி மன்ற வாயிலில் நகர சபைத் தலைவர் க.செல்வராசா வணக்கம் தெரிவித்து புதிய உறுப்பினர்களையும பாராளுமன்ற உறுப்பினர்களையும் கட்சி முக்கியஸ்தர்களையும் வரவேற்றார்.
தமிழ்தாய் வாழ்த்தின் பின்னர் திருகோணமலை தமிழரசுக் கட்சி கிளைத்தலைவர் க.துரைரெட்ணசிங்கம் அவர்களின் நெறிப்படுததலில் புதிய உறுப்பினர்கள் சம்பந்தன் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.
மாலை நியு சில்வெர் ஸ்டார் விடுதியில் நடைபெற்ற உறுப்பினர்களின் கூட்டத்தின் போது திருகோணமலை முதன்மை வேட்பாளர் சி.தண்டாயுதபாணி எதிர்கட்சி தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்ட்டார். இம் முடிவு பின்னர் கட்சி ஆதரவாளர்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் துரைரெத்தினம் கொரடாவாக தெரிவு செய்யப்பட்டார்.

No comments:
Post a Comment