இந்தியாவின் வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் கரைத்துறைப்பற்று பிரதேச
செயலாளர் பிரிவில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி தமிழ் மக்கள்
கவலை தெரிவித்துள்ளனர்.
இந்திய அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள வீட்டுத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 500 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 120 வீடுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
46 கிராம அலுவலர் பிரிவைக்கொண்ட கரைத்துறைப்பற்றில் முதற்கட்டமாக வீடு வழங்குவகும் திட்டத்தில் கிச்சாபுரம் என்ற கிராமத்தில் உள்ள 82 முஸ்லிம் மக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் இத்தெரிவு தொடர்பாக மக்கள் அதிருப்பி வெளியிட்டுள்ளனர்.
புள்ளித் திட்டத்தின் அடிப்படையிலேயே இந்த வீட்டுத்திட்டம் வழங்கப்படவுள்ளதால் 2008ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்களுக்கு குறைந்தளவு புள்ளிகளே வழங்கப்பட்டுள்ளன. அவ்வாறு என்றால் 82 பயனாளிகள் தெரிவு எந்த அடிப்படையில் இடம்பெற்றுள்ளது என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அத்துடன் 120 வீடுகளில் 82 வீடுகள் தவிர்ந்த 38 வீடுகளும் ஏனைய 45 கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள மக்களிற்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு தெரிவித்தபோதும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
அரசியல் செல்வாக்கு காரணமாகவே இந்தச் செயற்பாடு நடைபெற்றுள்ளதாகவும் யுத்தத்தால் உயிர்களையும் உடமைகளையும் இழந்த நிலையில் மீள்குடியேறியுள்ளவர்கள் 3 வருடங்களுக்கு மேலாக தற்காலிக குடிசைகளிலேயே வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த விடயம் தொடர்பாக முல்லை மாவட்ட அரச அதிபர் வேதநாயகனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,
'முதற்கட்ட தெரிவில் கிச்சாபுரம் என்ற முஸ்லிம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு முன்னுரிமைப்படுத்தி இந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அனுமதி பெறுவதற்கான அறிக்கை சமர்பிக்கப்பட்டபோதும் எதிர்பார்க்கப்படும் அனுமதியின் கீழ் 82 பேருக்கான வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளதாவும் அவர்களுக்கான காசோலைகள் எதிர்வரும் 02ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாகவும்' முல்லை மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார்.
நன்றி தமிழ்மிரர்

No comments:
Post a Comment