Thursday, September 27, 2012

ஏவுகணைகள் இலக்கு வைக்கப்படவில்லை- இந்தியா

இலங்கையின் கேந்திர முக்கியத்தும்வாய்ந்த நிலைகளை தனது ஏவுகணைகள் இலக்குவைப்பதாக வெளியான செய்திகளை இந்தியா நிராகரித்துள்ளது. இவை முற்றிலும் ஆதாரமற்ற புனையப்பட்ட கதைகள் என இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியா நீண்டகாலமாக உள்நாட்டு ஏவுகணை அபிவிருத்தித் திட்டத்தை கொண்டுள்ளது எனவும் அத்திட்டம் தற்பாதுகாப்பு அடிப்படையிலானது  எனவும் அது எந்தவொரு நாட்டையும் இலக்கு வைக்கவில்லை எனவும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் அண்மையில் தான் மேற்கொண்ட சந்திப்பு குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திருப்தி தெரிவித்த நிலையில் இந்தியாவின் இவ்வறிப்பு வெளியாகியுள்ளது.

"இவ்விஜயம் வெற்றிகரமாக அமைந்தது. இந்தியா எமது நெருங்கிய அயல்நாடான இந்தியாவுடனான எமது நீண்ட வரலாற்று ரீதியான உறவுகளை மேலும் வலிமைப்படுத்த இவ்விஜயம் உதவியது" என ஊடக ஆசிரியர்களுடனான மாதாந்த சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

நன்றி   தமிழ்மிரர்

No comments:

Post a Comment