Tuesday, October 30, 2012

புல்வேளாண்மை தினம்



 30.10.2012 பாபு
கிழக்கு  மாகாண  விவசாய  கால்நடை கிராமிய  அபிவிருத்தி அமைச்சு  அக்டோபர் முத்பதாம் திகதியை 30.10.2012 புல்வேளாண்மை ஊக்குவிப்பு  தினமாக பிரகடணம் செய்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் பால உற்ப்தியையும். பசும்பால் நுகர்வினையும்  அதிகரிக்கும் பொருட்டு இத்திட்டம் முன்வைக்கப்பட்டது. இதனை ஊக்குவிக்கும் முகமாக 11இலட்சம் புல் துண்டங்கள் விநியோகிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  உயர்ரக புல் இனங்களின் உற்பத்தியை எதிர்காலத்தில் பெருக்குவதற்கும் அமைச்சு  நடவடிக்கை எடுதது வருகின்றது. இத்திட்டத்தின் ஆரம்ப  வைபவம் செவ்வாய்க்கிழமை 30.10.2012 திருகோணமலையில் உள்ள  கால்நடை அபிவிருத்தி பயிற்சி திணைக்களத்தில் காலை நடைபெற்றது. கிழக்கு  மாகாண  விவசாய  கால்நடை அபிவிருத்தி அமைச்சு செயலாளர் எஸ்.பத்மநாதன் தலைமையில் நடைபெற்   இந் நிகழ்வில் கிழக்கு  மாகாண  வீதி அபிவிருத்தி நீர்பாசன  அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதம அதிதியாக  கலந்து கொண்டு புல் வேளாண்மை தினத்தை அங்குராப்பணம் செய்து வைத்தார்.





கிழக்கு  மாகாணத்தில் உள்ள 45 கால்நடை வைத்தி அலுவலகங்கள் ஊடாக  இப்புல் துண்டங்கள் விநியோகம் செய்யப்பட் உள்ளது.
சிறந்த புல் வளர்ப்பாளர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வைக்கப்பட்டதுடன்  கால்நடை அபிவிருத்தி திட்டங்களுக்கு நன்கொடைகளும் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கிழக்கு  மாகாண பிரதம செயலாளர் அபயகுணவர்த்தனவும் கலந்து சிறப்பத்தார்.

No comments:

Post a Comment