Wednesday, October 31, 2012

அதிபர் பாராட்டு


புனித சூசையப்பர் கல்லூரியில் 10 வருடங்கள்  அதிபராக சேவையாற்றி  அண்மையில் கல்வி சேவையில் இருந்து ஓய்வு பெற்ற வணக்கத்திற்குரிய ஜீவனதாஸ் பெர்ணாண்டோவுக்கான பாராட்டு விழா இன்று  நடைபெற்றது. கல்லூரிச் சமூகம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.
காலை 11 மணிக்கு  கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் அதிவந்தனைக்குரிய  கலாநிதி கிங்ஸிசுவாம்பிள்ளை, வலயக்கல்வி பணிப்பாளர் ந.விஜேந்திரன் ஆகியோர் அதிதிகளாகவும்,  அயற்பாடசாலை அதிபர்கள், வணக்த்திற்குரிய  தந்தைமார், சகோதரிகள்,  கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கத்தினர், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள்  நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

முந்நாள் அதிபரின் சேவையை பாராட்டி மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment