Showing posts with label Scouts. Show all posts
Showing posts with label Scouts. Show all posts

Wednesday, April 10, 2013

புது வருட முகாம்


ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி ( 2வது திருமலை சாரணர் குழு) சாரணர்களின் ஏற்பாட்டில் புதுவருட சாரணர் முகாம் இன்று 10.04.2013 புதன்கிழமை நடத்தப்பட்டது.காலை 6.00 மணி தொடக்கம் மாலை 6.30 மணி வரை இம் முகாம் நடைபெற்றது.  சாரணர்கள் மத்தியில் பல்வேறு போட்டி நிகழ்சிகள் இதன் போது நடத்தப்பட்டது.

Saturday, November 3, 2012

வழிகட்டிகளுக்கு பயிற்சி

 திருகோணமலை பெண்கள் வழிகாட்டிகளுக்கான  இரண்டாம் வகுப்பு  பயிற்சிகள்  வழங்கி வைக்கப்படுகின்றது. திருகோணமலையில்உள்ள 16 பாடசாலைகளைச் சேர்ந்த 167 பேர் இப்பயிற்சிகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.

Wednesday, October 31, 2012

அதிபர் பாராட்டு


புனித சூசையப்பர் கல்லூரியில் 10 வருடங்கள்  அதிபராக சேவையாற்றி  அண்மையில் கல்வி சேவையில் இருந்து ஓய்வு பெற்ற வணக்கத்திற்குரிய ஜீவனதாஸ் பெர்ணாண்டோவுக்கான பாராட்டு விழா இன்று  நடைபெற்றது. கல்லூரிச் சமூகம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.

Tuesday, October 23, 2012

சிலை திறப்பு

திருகோணமலை கடற்படைத்தள வீதியில் மாவட்ட சாரணர் சங்கத்தால் நிர்மானம் செய்ப்பட்ட சாரணன் சிலை திறந்து வைக்கப்பட்டள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை நகர சபையின் தலைவர் க.செல்வராஜா இதனைத் திறந்து வைத்தார்.இதனை  அன்பளிப்பு  செய்த சமாது தங்க விநாயகர் ஆலய  ஆதினகர்த்தா திருமதி தனேஸ்வரி சோமஸ்கந்த குருக்கள்  கௌரவ அதிதியாக கலந்து சிறப்பித்தார்.





Tuesday, October 16, 2012

சாரணர் சிலை

திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கத்தால் சாரணர் ஸ்தாபகர் பேடன் பவுல் பிரபுவின் சிலை நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. கடற்படைத்தள வீதியில் குளக்கோட்டன் தோப்புக்கு  முன்னால் இது ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று  செவ்வாய்க்கிழமை 16.10.2012 காலை இச்சிலை  அங்கு  அமைக்கப்பட்டுள்ள பீடத்தில் பொருத்தப்பட்டுள்ளது.இதன் திறப்பு விழா ஙாயிற்றுக்கிழமை 21.10.2012 காலை 11.00 மணிக்கு  நடைபெற உள்ளது.
இலங்கையில் சாரணீயம் ஆரம்பிக்கப்பட்டு 100 வருடங்கள் நிறைவு பெறுவதை குறிக்கும் முகமாக இந்நிர்மாணம் இடம்பெற்றுள்ளது.