கிழக்கு மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி நேற்று புதன்கிழமை 31.10.2012 வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று பார்வையிட்டார்.
காலையில் திருகோணமலை வடக்கு எல்லைக் கிராமமான தென்னமரவாடிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். அங்கு 52 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளையும் வழங்கி வைத்தார்.
குச்சவெளி பிரதேச செயலாளரைச் சந்தித்த தண்டாயுதபாணி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய நிவரண உதவிகளைச் செய்து கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதியம் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் மணற்சேனை நலன்புரி நிலையத்தில் உள்ள சம்புர் பகுதி மக்களைச் சந்தித்தார். அங்கு 58 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment