கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்பாசனம். வீடமைப்பு கிராமிய மின்சாரம் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை இன்று புதன்கிழமை 03.10.2012 தனது அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றார். இந்நிகழ்வில் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீது மற்றும் அமைச்சர்களான விமலதீர திசாநாயக்கா, ஹாபிஸ் நசார் ஆகியோருடன் சபை முதல்வர் அரியவதி கலபதி, அம்பாறை நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மதியம் 11.40 மணிக்கு இடம் பெற்ற இந்நிகழ்வில் பங்கு கொள்வதற்காக அட்டாளைச்சேனையில் இருந்து பெருமளவான ஆதரவாளர்கள் வந்திருந்தனர். அமைச்சுகளின் செயலாளர்கள். திணைக்க தலைவர்கள், பிரதம செயலாளர் மதத்தலைவர்கள், அலுவலகர்கள், ஆதரவாளர்கள் என அமைச்சின் கேட்போர் கூடம் கடமையேற்பின் போது நிரம்பி இருந்தது.
No comments:
Post a Comment