Saturday, November 10, 2012

5 விக்கட்டுக்களால் வெற்றி

 இலங்கை  பாடசாலைகள் கிரிக்கட் சங்கம் நடத்தும் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் திருகோணமலை பெருந்தெரு விக்நேஸ்வரா மகா வித்தியாலயத்தை எதிர்கொண்ட ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

ஸ்ரீ கோணஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் இப்போட்டி சனிக்கிழமை 10.11.2012 நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய விக்நேஸ்வரா மகா வித்தியாலய அணியினர் தமது முதல் இன்னிங்சில் 22.3 பந்து பரிமாற்றங்களில்  109 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.


பதிலுக்கு விளையாடிய  ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லுஸரி அணியினர் 18.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 94 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய விக்நேஸ்வரா மகா வித்தியாலயம்  25 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் சகல விக்கட்டக்களையும் இழந்து 110 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.  அணித்தலைவர் ஜக்சன்  45 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில்  ரிஷிகீர்த்தனன்10 பந்து பரிமாற்றத்தில்  21 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களைப் பெற்றுக் கொண்டார்.
பதிலுக்கு 126 இலக்க்கினை எதிர்கொண்டு களம் இறங்கிய ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினர் 19.2 பந்து பரிமாற்றங்களில் 5 விக்கட் இழப்பிற்கு 128 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றனர்.

ஆரம்ப  துடுப்பாட்டவீரராக  களம் இறங்கிய  யு.மதுகரன் ஆட்டம் இழக்காமல் 53 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

No comments:

Post a Comment