கிழக்கு மாகாண சபையின் கார்த்திகை மாதத்திற்கான அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை 06.11.2012 காலை நடைபெற்றது. ஆளுநர் ரியர் அட்மிரல் மொகாண் விஜயவிக்கிரம கலந்து கொண்டு விசேட உரை நிகழ்த்தினார்.
மாகாண சபைக்கு வந்த ஆளுநரை சபாநாயகர் ஆரியவதி கலபதி வரவேற்றார்.
இதன் பின்னர் திருகோணமலை பொலிசாரின் மரியாதை அணிவகுப்பினை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.
சபை சபாநாயகர் தலைமையில் கூடிய போது ஆளுநர் விசேட உரை நிகழ்த்தினார்.
இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் எந்தவொரு மாகாண சபையும் தமது விருப்புக்களை நிறைவேற்றிக் கொள்ள தனித்து பயணிக்க முடியாது. எப்போதும் மத்திய அரசின் அனுசரனையையும் ஒத்துழைப்பினையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மாகாண சபைகளது செயற்பாடுகளுக்கு வருடாந்தம் அரசினது வரவு செலவுத் திட்டத்தில் இருந்து நிதியை பெற்றுக் கொள்ள வேண்டும். மாகாண அரச சேவையில் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை தீர்மானித்தல் மத்திய அரசுக்குரியதாகும் .என தெரிவித்த ஆளுநர் மாகாண சபை முறைமையின் நிர்வாக கட்டமைப்பு கையளிக்கப்பட்ட விடயங்கள் அதிகார எல்லைகள் அரசியல் அமைப்பில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றினை கிழக்கு மாகாணத்தில் மக்கள் பிரதிநிகளாக நியமிக்கப்பட்ட நீங்கள் நன்றாக விளங்கிக் கொண்டு மாகாண பொது மக்களுக்கு மிகுந்த பயனுறுதி மிக்க அபிவிருத்திகளையும் வினைத்திறன் உடைய சேவைகளையும் வழங்க வேண்டியது உங்கள்அனைவரதும் முக்கிய பொறுப்பும் கடமையுமாகும் எனவும் குறிப்பட்டார்.
இதன் பின்னர் மாகாண சபை உறுப்பினர்களுடன் இணைந்து குழு புகைப்படம் ஒன்றையும் எடுத்துக் கொண்டார்.

No comments:
Post a Comment