இலங்கை பாடசாலைகள்
கிரிக்கெட் சங்கம் நடத்தும் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில்
திருகோணமலை இராம கிருஷ்ண சங்கம் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி
வித்தியாலோக ராஜகீய வித்தியாலயத்தை 8 விக்கட்டுக்களால் வெற்றி கொண்டது.
இன்று சனிக்கிழமை 01.12.2012 காலை இப்போட்டி ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜகீய வித்தியாலோக அணியினர் முதலில் துடுப்பெடுத்தாட விரும்பினர்.முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 92 ஓட்டங்களைப் பெற்றனர் தரங்கா, டில்சான் இருவரும் தலா 26 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி உதவி அணித்தலைவர் ஹ.ரிஷிகீர்த்தனன் 7 ஒவர்கள் பந்து வீசி 5 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுக்களைப் பெற்றுக் கொடுத்தார்.
பதிலு்க்கு துடுப்பெடுத்தாடிய கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினர் 19 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றனர். அணித்தலைவர் வி.ஆனந்தபிரகாஷ் 51 , யு.மதுகரன் 22 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் பிரபாத் 5 ஓவர்கள் பந்து வீசி 22 ஒட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களைப் பெற்றார்.
இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய ராஜகீய வித்தியாலோக அணியினர் 18 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 51 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் ஹ.ரிஷிகீர்த்தனன் 8 ஓவர்கள் பந்து வீசி 12 ஓட்டங்களக்கு 5 விக்கட்டுக்களைப் பெற்றார்.
38 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினர் 2 விக்கட் இழப்பிற்கு இலக்கினை அடைந்து 8 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றனர்.
ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி உதவி அணித்தலைவர் ஹரிகரன் ரிஷிகீர்தனின் அபாரமான பந்து வீச்சே இவ்வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இவர் இரண்டு இன்னிங்சிலும் 15 ஓவர்கள் பந்த வீசி 17 ஓட்டங்களுக்கு 11 விகட்டுக்களை பெற்றிருந்தார்.

No comments:
Post a Comment