Tuesday, December 18, 2012

பணிபுறக்கணிப்பு

திருகோணமலை இ.போ.ச  ஊழியர்கள் பணிபபுறக்கணிப்பு போராட்டத்தில் இன்று  ஈடுபட்டார்கள். தனியார் பேரூந்துக்காரர்களால்  தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஆட்சேபம் தெரிவித்தே இப்போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டார்கள்.
திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்திற்கு  பஸ்வண்டிகளை  எடுத்து வந்த ஊழியர்கள்வைகளில் ஈடுபடாது தமது எதிர்ப்பினைத் தெரிவித்தார்கள். இதனால் போக்குவரத்துச் செவைகள் முற்றாக  ஸ்தம்பிதமடைந்தன.


கடந்த இரண்டு வாரங்களாக திருகோணமலைக்கும் தங்காலைக்கும் இடையில் நடத்தப்பட்டு வரும் சேவையில் ஈடுபடும்  பேரூந்து வண்டிகள் மீது மெல்சிறிபுர,அளுத்தோயா, ஹதரஸ்கொட்டுவ. மொரட்டுவ  போன்ற  இடங்களில் வைத்து கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொளளப்படுவதாகவும். இதனால் தமது உயிருக்கு  அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டே ஊழியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

தங்காலைக்கு  இ.போ.ச  வண்டிகளில் 500.00 கட்டணமாகவும். தனியார் வண்டிகளில் 900.00 கட்டணமும் அறவிடப்படுகின்றமை  குறிப்பிடத்தக்கது.

 அண்மைக்காலமாக  தனியார் பேரூந்துக்கார்களுக்கும் இ.போ.ச. வினருக்கும் இடையில் முறுகல் நிலமைகள் காணப்பட்டு வந்துள்ளது. 
வெளியடங்களில் இருந்து வந்த இ.போ.ச. வண்டிகள் மத்திய பேருந்து நிலையத்திற்கு  வராமல் திரும்பிச் சென்றுள்ளன.

உயர் அதிகாரிகள் இவ்விடயத்தில் கவனம் எடுத்து போராட்டத்திற்கு  உரிய தீர்வினைப் பெற்றுத்தரும் வரையில் தாம் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என ஊழியர்கள் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment