Monday, December 24, 2012

அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம்

கிழக்கு  மாகாண சபையால் 384 பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அடுத்த வருடம் முதல் நாளில் இருந்து செயற்படத்தக்கதாக இந்த நியமனம் அமைந்துள்ளது.
 30.06.2012ல் நடத்தப்ப்ட போட்டிப் பரீட்சையில் இருந்து தகமை அடிப்படையில் புள்ளிகள் பெற்றவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு  அழைக்கப்பட்டு அவர்களில் இருந்து இந்த 384 பட்டதாரிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு  இன்று காலை 10.00 மணிக்கு உவர்மலை விவேகாநந்தா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரம, முதல் அமைச்சர் நஜீப் ஏ மஜீது ஆகியோர் அதிதிகளாக  கலந்துகொண்டு கடிதங்களை வழங்கி வைத்தனர்.இந் நிகழ்வில் மாகாண அமைச்சர்களான  எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.மன்சூர் ஆகியோருடன் முன்னாள் அமைச்சர் நவரெட்ணராஜாவும் கலந்து கொண்டார்.


No comments:

Post a Comment