Tuesday, December 25, 2012

நிவாரணம் வழங்கல்

கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
கிழக்கு  மாகாண முதலமைச்சரின்  ஏற்பாட்டில் ஜம்மியத்து்ள சவாப் அமைப்பின் அனுசரணையில்  நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.  இன்று மாலை இவை கிண்ணியா பிரதேச  செலயாளர் பிரிவில் உள்ள நெடுந்திவு மக்களுக்கு  வழங்கப்பட்டது. இங்கு  300 குடும்பங்களுக்கு இந் நிவாரணம் பகிர்ந்தளிக்ப்பட்டது. முதலமைச்சர் நஜீப் அப்துல்  மஜீது இவற்றினை  வழங்கி வைத்தார்.
திருகோணமலை மாவட்ட இளைஞர் அபிவிருத்தி அகத்தின் ஏற்பாட்டில்   வெருகல் பிரதேச  செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்டடவர்களுககும் நிவாரணப் பொருட்கள் சில  வழங்கி வைக்கப்பட்டது. இதற்றினை  அகத்தின் அதிகாரிகளுடன் இணைந்த பிரதேச  செயலளார் பி.தனேஸ்வரன் வழங்கி வைத்தார்.

No comments:

Post a Comment