Monday, December 24, 2012

முதலமைச்சர் தொண்டர் நிறுவனங்களுடன் சந்திப்பு



கிழக்கு மாகாண  முதலமைச்சர்  தொண்டர் நிறுவனங்களின் பிரதானிகளுடன் வெள்ளி நிவாரணம் சம்பந்தமான  கலந்துரையாடலில் ஈடுபட்டார். இச்சந்திப்பு  மாலை 7.00 மணிக்கு முதலமைச்சர் செயலாக கேட்போர்  கூடத்தில்  இடம்பெற்றது.
மோசமாக  பாதிக்கப்பட்ட அனைதது மக்களுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரப்பட்டது.
யுத்தம் காரணமாக  இடம் பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் பல வருடங்களாக  தங்க  வைக்கப்பட்டுள்ளவர்கைள கவனிப்பார் யாருமில்லாது இருக்கிறது.
 இவர்களும் மழை காரணமாக  பாதிக்கப்பட்டுள்ளார்கள். கொட்டில்களும் சேதமடைந்த நிலையில் இருக்கிறது. மழை நீர் இவற்றினையும் பாதித்துள்ளது  இவர்களுக்கு  தார்பாலின் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என  முதலமைச்சர் நஜீப் ஏ மஜீதினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனை  தொண்டர் நிறுவன பிரதானிகள் ஏற்றுக் கொண்டனர்.


நிவாரணம் வழங்கும் போது பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டு கிளிவெட்டி, படடித்திடல் போன்ற  இடங்களில் உள்ள  446 குடப்பங்களுக்கும் உதவி வழங்க  தாம் ஆவண செய்வதாக  தெரிவித்தனர்.

No comments:

Post a Comment