Thursday, January 10, 2013

உயிர் பிழைப்பு

உட்துறைமுக வீதியில் வீதி அமைப்பு  பணியில் ஈடுபட்டிருந்த  அசித்த வயது 21  விபத்தொன்றில் இருந்து உயிர்தப்பிக் கொண்டார்.

வன இலாகாவுக்குச் சொந்தமான காணியின் அருகில் வடிகான்  பணியில் ஈடுபட்டிருந்த போது சுற்றுமதில் இவர் மீது சரிந்தது. 18 அடி நீளமான  மதில் இடிந்து விழுந்தததில் இச்சம்பவம் இடம்பெற்றது. இவரை முற்றாக  முழுகடித்த மதிலின் சிதைவுகளில் இருந்து இவருடன் வேறு பணியில் ஈடுபட்டிருந்த சக தொழிலாளர்கள்  சிரமங்களுக்கு மத்தியில் இருந்து காப்பாற்றிக் கொண்டனர். 15 நிமிட போராட்டத்தன் பின்னர் இவர் மீட்கப்பட்டார்.பலத்த காயங்களுக்கு  உள்ளான  இவர் திருகோணமலை பொது வைத்தியசாலையி் விபத்து சிகிற்சைப் பிரிவில் சிகிற்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

No comments:

Post a Comment