Friday, January 4, 2013

வீதி அமைப்பு

திருகோணமலை முற்றவெளி மைதானத்தில் நகர சபையினால் 30 அடி அகலம கொண்டதாக  650 மீற்றர் நீளமான  வீதி ஒன்று அமைக்கப்படுகின்றது.
கடற்படைத்தள  வீதியையும், கோட்டை வீதியையும் இணைக்கும் முகமாக இது அமைக்கப்படுகின்றது. இதன் காரணமாக  நகர எல்லைக்குள் இருக்கும் விளையாட்டு வீரர்களின் பொழுது போக்குக்கு எதிர்காலத்தில் குந்தகம் ஏற்படக் கூடிய நிலை தோன்ற  வாய்ப்பு உள்ளது. விளையாடிக் கொண்டிருக்கும்  போது வாகனங்கள் செல்வதை தடுக்குமாறு  விளையாட்டு வீரர்கள்  பொலிசாரையும். நகர சபையினரையும் முன்னர் பல தடவைகள் கேட்டிருந்தனர்.  இருப்பினும் அவர்களால் எந்த விதமான  ஆக்க புர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. முற்றவெளி மைதானத்திற் குள் வாகனங்கள் நுழையாதவாறு தடுப்புச் சுவர் எழுப்பப்படும் என  நகர சபைத் தலைவர் முன்னர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதுவும் ஏற்படுத்தப்பட வில்லை.

No comments:

Post a Comment