Monday, January 21, 2013

வீதியில் குழி நகரம் பரபரப்பில்

திருகோணமலை பிரதான வீதியில் குழி ஒன்று தோன்றி அதிலிருந்து நீர் வெளியேறுகிறது. உப்பு நீர்  வருகிற்து. நீர் சுடுகின்றது. இவ்வாறான தகவல்கள் திருகோணமலை நகரததில் பரபரப்பை  ஏற்படுத்தி இருந்தது.

மதியம் 1.30 மணியளவில் நீர் குழாயில் ஏறபட்ட கசிவு காரணமாக  பெருமளவான நீர் பிரதான  வீதியில் விக்நேஸ்வரா மகா வித்தியாலயத்தின் முன் இருந்து வெளியேறியது. இதனை அறிந்திராதவர்கள் இவ்வாறான கதைகளை  தமது இஸ்டப்படி கசிய விட்டனர். கதை பரவதே மக்கள் கூட்டம் பெருகத் தொடங்கியது. தூர இடங்களில் இருந்தும் மக்கள் வரத்தொடங்கினர்.
அவ்வழியால் வந்தி திருகோணமலை நீர் வழங்கல் வடிகான் அமைப்பு சபை பிராந்திய முகாமையாளர் கோ.வாசுதேவன் நிலமையை  அறிந்து கொண்டார். பிரதான  நிர் விநியோகத்ததை உடனடியாக  கட்டுப்படுத்தினார். நிர் வெளியேற்றம் குறைவடைந்தது.
செய்தி அறிந்து நகர சபைத்தலைவர் க.செல்வராசா உறுப்பினர் த.கௌரிமுகுந்தனுடன்  ஸ்தலத்திற்கு விடயத்தை அறிந்து கொள்ள வந்தார்.திருத்த வேலைகளை  ஆரம்பிப்பதற்கான  முயற்சிகளை  மேற்கொள்ள நீர் வழங்கல் சபையினரைக் கேட்டுக் கொண்டார்.இதற்காக  சபைக்கு சொந்தமான  கனரக  வாகனம் ஒன்றையும் சேவைக்கு  வழங்கினார்.





 குழியில் இருந்து நீரை வெளியேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. நிர்வரத்து குறைந்த பாடாக  இல்லை. கடற்படைதள நீர் விநியோக  குழாயில் இருந்தும் நீர் வந்து கொண்டு இருந்தது. கடற்படை அதிகாரிகளும் ஸ்தலத்திற்கு  வ்ந்து  குழாய  திருத்துவதற்கு  அனுமதி வழங்கினார்கள். இரவு 10.30 மணிக்கு இரண்டு குழாய்களும் சீர் செய்யப்பட்டு நீர் வரத்து கட்டுப்படுத்தப்பட்டது.
இறுதிவரை ஸ்தலத்தில் இருந்து பணிகளை ஆற்றிய  பிராந்திய முகாமையாளர், பொறியியலாளர்க், ஊழியர்கள்,நகர சபைத் தலைவர் , உறுப்பினர்கள். நகர சபை ஊழியர்களது சேவையை  திருமலை பிரமுகர்களும். இளைஞர்களும்  பாராட்டினார்கள். இரவு 11 மணி வரை இப்பணி நடைபெற்றது.

No comments:

Post a Comment