Sunday, January 6, 2013

பொலிஸ் மா அதிபர் திருகோணமலை விஜயம்

திருகோணமலையில் நடைபெற இருக்கும் சுதந்திர தின நிகழ்வு  வேலைகளைப் பார்வையிடவும். பாதுகாப்பு  ஏற்பாடுகளை முன்னெடுக்கவும் பொலிஸ் மா அதிபர் என்.இலங்ககோன் திருகோணமலைக்கு  வெள்ளிக்கிழமை  வியஜம் செய்தார்.

சீனக்குடா பம்பர ஹவுஸ்ல் தங்கியிருந்த பொலிஸ் மா அதிபர் சனிக்கிழமை 05.01.2013 காலை உவர்மலையில் உள்ள பிரதி பொலிஸ மா அதிபர்அலுவலகத்தில் பொலிஸ் அதிகாரிகளுடனான  கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.
இதன் பின்னர் சுதந்திர தின  கொண்டாட்டம் நடைபெறும் இடத்திற்குச் சென்று  அங்கிருந்து திருக்கோணேஸ்வரம் ஆயத்திற்குச் சென்று வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.
பிரடறிக்கோட்டையில் உள்ள தலைப் பொலிஸ் பரிசோதகர் வாசஸ்தலத்திற்கும் சென்றார். தற்போது இது பொலிசாரின் சுற்றுலா விடுதியாக  மாற்றப்பட்டு நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் வேலைகளையும் பொலிஸ் மா அதிபர் பார்வையிட்டார்.

No comments:

Post a Comment