திருகோணமலை தனியார் பஸ் கம்பனி இன்று ஞாயிற்றுக்கிழமை 06.01.2013 நள்ளிரவு தொடக்கம் மறு அறிவித்ல் வரை சேவை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.
இது பற்றி ஊடகவியலாளர்களை அழைத்து இன்று அறிவித்தனர். இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் தங்களுக்கும் இடையே பஸ் வழித்தடங் களில் முரண்பாடு தோன்றி உள்ளது. இதன் காரணமாக நீதிமன்றில் 8 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இவற்றுக்கான தீர்ப்பு 21.01.2013க்கு பின்னர் கிடைக் உள்ளது.
நீதிமன்ற அறிவித்தலின் பிரகாரம் புதிய சேவைகள் நடத்தப்படக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை போக்குவரதத சபைின் திருகோணமலை முகாமையாளர் தங்காலை, அம்பாந்தோட்டை போன்ற இடங்களுக்கு புதிய வழித்தட சேவைகளைத்தொடங்கி உள்ளார். அது போன்று யாழ்ப்பாணத்துக்கு மேலும் 3 சேவைகளை ஆரம்பித்துள்ளார். இதன் காரணமாக எமக்கு கிடைக்க வேண்டிய வருமானங்கள் இல்லாது போய் விடுகின்றது.
யாழ்ப்பாணத்துக்கான வழித்தடத்துக்குபல இலட்சங்கள் கேள்வி கோரப்பட்டு நாம் பெற்றுள்ளோம். புதிய சேவைகள்நடத்தப்பட மாட்டாது என்ற கிழக்கு மாகாண போக்குவரத்து அமைச்சின் உறுதிமொழிக்கு அமையவே நாம் இதனைப் பெற்றுள்ளோம். அப்படி இருக்கையில். இலங்கை போக்குவரத்து சபையால் புதிய சேவைகள் நடத்தப்படுகின்றது. இதனால் எமது வண்டிகளு
க்கு பயணிகள் கிடைக்காத நிலை ஏற்பட்டள்ளது என பஸ்கம்பனியின் தலைவர் ஜி.ஜி.விமலசேனா தெரிவித்தார்.
சேவையில் ஈடுபடுவதால் நட்டம் ஏற்படுமானால் அதில் ஈடுபடாமல் இருப்பது நல்லது என்ற முடிவுக்கு நாம் வந்துள்ளோம். இதன் காரணமாக இன்று நள்ளிரவு எமத உரிமையாளர்கள் 125 பேருக்கும் சொந்தமான 165 வண்டிகள் சேவையில் ஈடுபடுவதை நிறுத்தி எமது கோரிக்கைக்கு சரியான பதில் கிடைக்கும் வரை சேவையை நடத்தாமல் இருக்க திட்டமிட்டுள்ளோம் என மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment