Thursday, February 14, 2013

சொகுசு வாழ்வுக்கே அவுஸ்திரேலியா செல்கின்றனர்

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் சொகுசு வாழக்கை  வாழ்வதற்காகவே சட்ட விரோதமான  முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்கின்றனர்.  இவ்வாறு கிழக்கு  மாகாண  முதல் அமைச்சர் நஜிப் அப்துல் மஜீது தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய நாட்டின் சுங்கம் மற்றும் எல்லைப்புறப் பிரிவின் தலைமை அதிகாரி திருமதி சூனைட் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீதின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

'கிழக்கு மாகாணத்தில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுகின்றது. உயிர் உடமைகளுக்கு அச்சுறுத்தல் இல்லாமல் மக்கள் அமைதியாக வாழ்கின்றனர். படகுகளில் சட்டவிரேதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்பவர்கள் பணம் உள்ளவர்கள். அவர்கள் சொகுசு வாழ்க்கையை தேடிச்செல்பவர்கள்' என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது, அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக படகுகளில் வருபவர்களில் அதிகமானோர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவுஸ்திரேலிய நாட்டின் சுங்கம் மற்றும் எல்லைப்புறப் பிரிவின் தலைமை அதிகாரி திருமதி சூனைட் முதலமைச்சருக்கு சுட்டிக்காட்டியதுடன் அவர்கள் அவ்வாறு அகதிகளாக வருவதற்கான காரணங்களையும் கேட்டறிந்தார்.
இதற்கு பதிலளித்த கிழக்கு மாகாண முதலமைச்சர்,

'சட்டவிரோதமாக படகுகளில் செல்வதை தடுக்கும் நோக்கில் கிழக்கு மக்கள் மத்தியில் முப்படைகளின் அனுசரணையுடன் விழிப்புணர்வு செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த கிழக்கு மாகாண சபை நடவடிக்கை எடுத்து வருகிறது' என்று முதல் அமைச்சர் அவுஸ்திரேலியா ங்கம் மற்றும் எல்லைப்புறப் பிரிவின் தலைமை அதிகாரி திருமதி சூனைட் அவர்களிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment