Tuesday, July 2, 2013

162 ஓட்டங்களால் வெற்றி

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் நடத்தும் 15 வயதுக்கு உட்பட்ட பிரிவு III க்கான போட்டியில் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினர் 162 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை  02.07.2013 ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரிக்கும் பதவிய ரக் 1142 வித்தியாலயத்திற்கும் இடையலான 50 பந்து பரிமாற்றம் கொண்ட போட்டி கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறறது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடினர்.
 42.5 பந்து பரிமாற்றங்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 276 ஓட்டங்களைப் பெற்றனர்.  க.கிரிசாந்தன்  56 பந்துகளுக்கு 41 ஓட்டங்களையும், யு.மதுகரன் 29 (24), வி.ஆனந்தபிரகாஷ் 30 (24), பே.பானுசாந் 20 (18), ஹ.ரிஷிகீர்த்தனன் 22 (46) , வே.தக்சனன் 22 (32) ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இசன்ன லக்மல் 56 ஓட்டங்களுக்கு 3 விகட்கடுக்களையும், டில்சான் 32 ஓட்டங்களுக்கு 2 விகட்டுக்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு களம் புகுந்த பதவிய வித்தியாயலய அணியினர் 25 பந்து பரிமாற்றங்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து  114 ஓட்டங்களைமாத்திரம் பெற்றுக் கொண்டனர். மாலக்க 26 (46), டில்சான் 12 (19) ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ஹ.ரிஷிகீர்த்தனன்  6.2 பந்து பரிமாற்றங்களுக்கு 21 ஓட்டங்களக்கு 5 விக்கட்டுக்கயும், வி.ஆனந்தபிரகாஷ ம.அஜந்தன்,  பு.டினுர்சன், பே.பானுசாந் ஆகியோர் தலா ஒரு விக்கட்டுக்களையும் பெற்றுக் கொண்டனர்.

இப்போட்டியில் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி பதவிய  வித்தியாலயத்தை 162 ஓட்டங்களால் வெற்றி கொண்டது.
கடந்த வியாழக்கிழமை வித்தியாலாக ராஜகீய தேசிய பாடசாலையுடனான போட்டியில் 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.
முன்னர் கிண்ணியா மத்திய கல்லூரியுடன் கடந்த செவ்வாய்கிழமை இடம் பெற்ற போட்டியில் 86 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியிருந்தது.

No comments:

Post a Comment