Tuesday, October 16, 2012

பாராட்டு விழா

தரம்5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய  ஸ்ரீ சண்முக  இந்து மகளீர் கல்லூரி மாணவர்களை பாராட்டும் நிகழ்வு  பெற்றோர்களால் எற்பாடு செய்யப்பட்டது. திங்கட்கிழமை 15.10.2012 காலை 11.00 மணிக்கு  இவ் விழா சம்பந்தர் மண்டபத்தில் நடத்தப்பட்டது.
இக்கல்லூரியில் இருந்து 129 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி இருந்தனர். இவர்களில் 42 மாணவர்கள் 147 என்ற  தகைமைப்புள்ளிக்கு மேல் பெற்று  கல்லூரிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
செல்வி காவியா பாலேந்திரன் என்ற மாணவி 191 புள்ளிகள் பெற்று மாவட்டத்தில் முதல் நிலையை அடைந்துள்ளார்.செல்வி அபிஷேகா அஜித் 189 புள்ளிகள் பெற்றும் இரண்டாம் நிலையினை  பெற்றுள்ளார்.

இவர்களுக்கு  கற்பித்த ஆசிரியர்களும் பெற்றோர்களால் பாராட்டப்பெற்றனர். 
திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் ந.விஜேந்திரன் முதன்மை விருந்தினராகவும். ஆரம்பகல்வி உதவிக் கல்வி பணிப்பாளர் எஸ்.கணேசலிங்கம் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.
இப்பாராட்டுக்கு புறம்பாக  மூதூர் மலைநீலி அம்மன் வித்தியாலய மாணவன் சிங்கராஜா நவஜீவனராஜா 155,சீனக்குடா தமிழ் வித்தியாலத்தில் இருந்து தகைமை பெற்ற கிறிஸ்தோபர் ஜெனிபர்154, கப்பல்துறை சரஸ்வதி வித்தியாலய மாணவி  செல்வி சிவகுமார் டிலனி 148 ஆகியோரம் அழைக்கப்பட்டு அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுடன் சேர்த்து பாராட்டப்பட்டனர்.

No comments:

Post a Comment