Monday, October 1, 2012

புலமைப்பரிசில்

அண்மையில் வெளியான  தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை  முடிவுகளின்படி கிண்ணியா கல்வி வலயம் ஈச்சந்தீவு விபுலாநந்தா வித்தியாலயத்தில் இருந்து தோற்றிய  11 மாணவர்களில் 8 மாணவர்கள் 147 என்ற  தகைமைப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.
வி.அபிநயா172 , சே.நிவேதிகா 160,  ச.அனோஜன் 160,  ந.திலக்சனா 159, ர.தக்சலா 156,    வி.கிருஷாந்தி 155,  யோ.பிருத்தியா 150,   ம.வினுஸ்கரன் 158 ஆகியோரே இவ்வாறு தகைமை பெற்றவர்களாவர்.  இப்பாடசாலையில்2011 ஆம் வருடம் 3 மாவர்களும்,  2010 ஆம் வருடம் 4 மாணவர்களும்,  2009 ஆம் வருடம் 2 மாணவர்களும்,  2008 ஆம் வருடம் 5 மாணவர்களும் தகைமை பெற்றிருந்தனர்.

இதேவேளை திருகோணமலை கல்வி வலயத்தில் உள்ள தேசிய பாடசாலைகளான  ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் கல்லூரியில் இருந்து தோற்றிய 129 மாணவர்களுள் 42  பேரும், இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் இருந்து தோற்றிய 142 பேரில் 42  மாணவர்களும்,   உவர்மலை விவேகாநந்தா கல்லுரியில் இருந்து தோற்றிய  126 மாணவர்களுள் 20 பேரும், புனித மரியாள் கல்லூரியில் இருந்து தோற்றிய 64 மாணவர்களுள் 14 பேரம் தகைமைப் புள்ளிகளுக்கு  மேல் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment