Tuesday, October 23, 2012

அன்பளிப்பு


திருகோணமலை மாணிக்கவாசகர் வீதியில்  அமைந்துள்ள பேச்சி அம்மன் ஆலய நிர்வாகத்தினரால் பாடசாலை மாணவர்களுக்கு  இலவச  அப்பியாச புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டது. ஆலயத்திற்கு  அருகில் அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை 23.10.2012 மாலை 5.15  மணிக்கு  இவ் வைபவம் நடைபெற்றது.
சுமார் 400 மாணவர்களுக்கு  இவ்வாறு உபகரணங்கள் வழங்கப்பட்டது. ஆலயததிற்கு  அருகில் வதியும் மாணவர்கள் இவற்றினைப் பெற்றுக் கொண்டார்கள்.  நவராத்திரியை  முன்னிட்டு இவை வழங்கப்பட்டது. இச் செயற்பாட்டினை ஏனைய  ஆலயங்களும் மேற்கொள்ள முன்வர வேண்டும் என  ஆலய  தர்மகத்தாவால் வேண்டுகோள்  விடுக்கப்பட்டது.



No comments:

Post a Comment