Showing posts with label Kovil. Show all posts
Showing posts with label Kovil. Show all posts

Sunday, August 17, 2014

வில்லூன்றி திருவிழா


ஏழாம் நாள்உற்சவம்

Tuesday, June 11, 2013

ஆலயம் புனரமைப்பு


 திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய மண்டபங்கள் புனரைமப்புச் செய்யப்பட உள்ளது. இதற்காக பழைய மண்டபங்களை அகற்றும் பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  விரைவில் கும்பாபிஷேகம் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.

Saturday, June 8, 2013

ஆலய கோபுரம் சேதம்

 ஸ்ரீ கற்பக விநாயகர் (சுண்டங்காட்டுப்பிள்ளையார்) ஆலயத்தின் கோபுரத்தில் பாவைகள் 13 இனம் தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது. ஆலயம் கோபுரத்தின் நிர்மாணப்பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் இவ்வாறாறன விரும்பத்தகாத செயல் இடம் பெற்றுள்ளது.
கடந்த சில தினங்காள நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் த நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதோடு அங்கு சிதைவுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
திருஞானசம்பந்தர்வீதி ஸ்ரீ கற்பக விநாயகர்  ஆலயம் சம்பந்தமாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.













Thursday, April 11, 2013

திருக்கோணேஸ்வரர் தேர்

பாடல் பெற்ற திருத்தலமான திருக்கோணேஸ்வரத்தில் தேர் திருவிழா இன்று 11.04.2013 காலை நடைபெற்றது.

Monday, March 11, 2013

கோணேசர் ஊர்வலம்

 வரலாற்று பெருமை கொண்ட திருக்கோணேஸ்வரர் பெருமானின் வருடாந்த நகர்வலம்  இன்று மாலை ஆரம்பமானது. 4.30 மணிக்கு  ஆலயத்தில் இருந்து புறப்பட்டு நகர வீதிகள் வழியாக  சென்றார். 5 தினங்கள் இவ் ஊர்வலம் நடைபெற உள்ளது.

Saturday, February 23, 2013

பணியாளர்கள் கைது

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் நிர்மாணப் பணியில் ஈடுபட்ட தொழிலாளரகள் எண்மர் பொலிசாரால் விசாரணைக்காக  அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Sunday, December 23, 2012

பாலம்போட்டாறு மூழ்கியுள்ளது

கந்தளாய் குளத்தில் இருந்து அதிகளவான நீ ர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக  பாலம்போட்டாறு பத்தினி அம்மன் ஆலயம்  வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.

Friday, December 21, 2012

வெருகலில் வெள்ளம்

 திருகோணமலை மாவட்டம் தெற்கே உள்ள  சின்னக்கதிர்காமம் என்று போற்றப்படும் வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயம் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. ஆலயத்தின் சுற்றாடலில் 4 அடிக்கு மேல் வெள்ளம் காணப்படுகின்றது. ஆலயத்தினுள்ளும் வெள்ள  நீர் சூழ்ந்துள்ளது.

Tuesday, November 13, 2012

கேதார கௌரி நோன்பு

திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் கேதார கௌரி காப்பு  வழங்கல் இன்று நடைபெற்றது.பெருமளவான பக்தர்கள் ஆலயத்தில் சூழ்ந்திருந்தார்கள்.

Tuesday, October 23, 2012

அன்பளிப்பு


திருகோணமலை மாணிக்கவாசகர் வீதியில்  அமைந்துள்ள பேச்சி அம்மன் ஆலய நிர்வாகத்தினரால் பாடசாலை மாணவர்களுக்கு  இலவச  அப்பியாச புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டது. ஆலயத்திற்கு  அருகில் அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை 23.10.2012 மாலை 5.15  மணிக்கு  இவ் வைபவம் நடைபெற்றது.

Tuesday, October 9, 2012

ஆலய சிலைகள் தகர்ப்பு

கோபாலபுரம் கண்ணகை  அம்மன் ஆலயத்தின் சிலைகள் இளைஞன் ஒருவரால் செவ்வாய்க்கிழமை 09.10.2012 காலை தகர்க்கப்பட்டுள்ளது. பொது மக்களது ஆத்திரத்திற்கு உள்ளாகி தான் தாக்கப்படுவோம் என  அஞ்சி குச்சவெளி பொலிசில் சரணடைந்துள்ளார்.

Saturday, September 29, 2012

நடை பவனி

வெருகல் சித்திர வேலாயுதர் சுவாமி ஆலயத்தை நோக்கி திருக்கோணேஸ்வரத்தில் இருந்து நடை பவனி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. காந்தீய பெரியார் பொ.கந்தையா இதனை இன்று சனிக்கிழமை 29.09.2012 கா 7.15 மணிக்கு ஆரம்பித்து வைத்தார். 11வது தடவையாக  இந்த நடைபவனி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.