Wednesday, November 14, 2012

சமநிலையில் போட்டி முடிவு

திருகோணமலை பெருந்தெரு விக்நேஸ்வரா மகா வித்தியாலயத்திற்கும் சேருவில மஹாவலிகம் வித்தியாலயத்திற்கும் இடையிலான  13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் இன்று புதன்கிழமை இப்போட்டி  நடைபெற்றது.
முதலில் களம் இறங்கிய மஹவலிகம் வித்தியாலயம் 142ஒட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. விக்நேஸ்வரா மகா வித்தியாலயம்  55 ஓட்டங்களுக்கு சகல விகட்கட்டக்களையும் இழந்தது.
இரண்டாவது இன்னிங்ஸ்க்காக  களம் புகுந்த மஹாவலிகம் வித்தியாலயம்  ஆட்ட நேர முடிவின் போது 7 விக்கட் இழப்பிற்கு 233 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.
வெற்றி வாய்ப்பு இருந்தும் மஹாவலிகம வித்தியாலய பயிற்றுவிப்பாளரின் தவறான கணிப்பு இந்நிலைக்கு காரணமாக  அமைந்தது.
ஸ்ரீ கோணுஸ்வரா இந்துக் கல்லூரிக்கும் கந்தளாய் மத்திய கல்லூரிக்கும் இடையே  கந்தளாயில் நடைபெற இருந்த போட்டி  மழைகாரணமாக பிறிதொருதினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment