Saturday, November 3, 2012

பரிசளிப்பு விழா

ஸ்ரீ சண்முகா  இந்து மகளீர் கல்லூரி பரிசளிப்பு விழா இன்று சனிக்கிழமை நடைபெற்றது. அதிபர் திருமதி சு.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் இலங்கை வங்கியின் கிழக்கு  மாகாண பிரதி பொது முகாமையாளர் கே.பி.ஆனந்தநடேசன் பிரதம அதிதியாகவும. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அதிபர் இ.புவநேந்திரன் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.
கடந்த வருடம் க.பொ.த சாதாரண தரம், உயர்தரம் பரீட்சைகளில் அதி விசேட சித்திகளைப் பெற்றோர், தேசிய மட்டத்தில் தமது திறமைகளை வெளிப்படுத்தியவர்கள் எனப் பலரும் பரிசுகளைப் பெற்றுக் கொண்டனர்.


பிரதிபா பிரபா என்னும் ஆசிரியர் விருதினை இவ்வருடம் பெற்றுக் கொண்ட கல்லூரி ஆசிரியர்களான    செல்வி. வ.செல்லக்கண்டு, திருமதி. த.பாலேந்திரா இருவரும் பொன்னாடை அணிவித்து மாலையிடப்பட்டு  நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மாணவிகளின் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டது.




No comments:

Post a Comment